CVTHNUDF
தொகுப்பு       +91 (0)44 - 2597 4747
சென்னை மாநகரத்திற்கு தெற்கே சுமார் 550 கி.மீட்டர் தொலைவில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 108 திவ்ய சேத்திரத்தில் ஒன்றஹ்ன திருத்தங்கல்லில் திருநின்ற நாராயண பெருமாள் உடன் செங்கமல நாச்சியார் ஆகிய இருவரும் தண்கால மலையில் நின்று இங்கு தங்கி அருள் பாலிப்பதால் திருத்தங்கல் என்று பெயர் பெற்ற ஊர் அமைந்துள்ளது. இவ் ஊரில் உள்ள தண்கால மலையில் தென்திசையில் திருநின்ற நாராயண பெருமாள் கோயிலும் வடதிசையில் கருநெல்லி நாதர் கோயிலும் மற்றும் பால தண்டாயுதபாணி கோயிலும் ஒருங்கே அமைய பெற்று அருள் பாலிக்கின்றனர். மேலும் திருத்தங்கல் இந்து நாடார் உறவின்முறைக்கு சொந்தமான சிங்காரத்தோப்பு விநாயகர் திருக்கோயில் அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் அருள்மிகு சக்தி மாரியம்மன் திருக்கோயில்களின் அருளால் சிறப்புற்ற இவ் ஊரில் பிறந்து வளர்ந்து தங்கள் வாழ்வாதாரத்தை தேடி இடம் பெயர்ந்து சென்னை மாநகரில் குடிபெயர்ந்து கடை சிப்பந்திகளாகவும் , வணிகர்களாகவும் மற்றும் சிறு தொழில் செய்தும் வந்தனர். இம்மக்களிடையே ஒற்றுமை வளர்க்கவும் வாழ்வில் மேன்மை அடையவும் உறுதுணையாக இருக்கும் பொருட்டு உறவின்முறை உருவாக்க முடிவு செய்து நம் குல பொரியோர்களான திரு. ளு. குருசாமி நாடார், இராஐபாளையம் திரு. P.ளு. தங்கையா நாடார், திருச்சி திரு. ஆ.ளு. இராமையா நாடார், திரு. கூ.ஆ.ளு. ஆறுமுக நாடார் ஆகியோரின் பெரு முயற்சியால் திரு. கூ.ஆ.ளு. ரத்தினம் க்ஷ பிரதர்ஸ் அவர்களுக்கு சொந்தமான சென்னை - 21, கும்மாளம்மன் கோயில் தெருவில் உள்ள பாக்கியம் பவனில் வைத்து 14.09.1956 அன்று கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் திருச்சி திரு. ஆ.ளு. ராமையா நாடார் அவர்களின் திருகரத்தால் மஞ்சள் தேய்த்து எழுதி துவக்கி வைக்கப்பட்டது, சென்னைவாழ் திருத்தங்கல் இந்து நாடார் உறவின்முறை தர்மபண்டு ஆரம்பிக்கப்பட்டு முறையான நிர்வாக அமைப்பு உருவாக்கபட்டது. .

மேலும் விவரங்கள் அறிய Download PDF