CVTHNUDF
தொகுப்பு       +91 (0)44 - 2597 4747
108 வைணவத் திருப்பதிகளில் ஒன்றான திருநின்ற நாராயண பெருமாள் திருக்கோயில் உலகை காக்கும் எம் பெருமான் நாராயணன் தண்காலப்பன் என்ற பெயரில் அன்ன நாயகி, ஆனந்த நாயகி, அம்ருத நாயகி ஜாம்பவதி ஆகிய நான்கு தாயார்களுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சிதந்து அருள் பாலித்து கொண்டிருக்கும் இடமாகும். இது வைணவ திருத்தலங்கள் 108 திவ்ய தேசங்களில் 45வது திருத்தலமாகும்.

நாராயண்ன தண்காலப்பன் கோவில் தலத்திலேயே வடக்கு திசையில் கருநெல்லிநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சுயம்பு லிங்க வடிவில் சிவபெருமான் கருநெல்லிநாதராக அருள் பாலித்து கொண்டிருக்கிறார். இத் தலம் பல நூற்றாண்டுகள் பழமையானது ஆகும்.

நாராயண்ன தண்காலப்பன் மற்றும் கருநெல்லிநாதர் உடன் முருகபெருமான் தண்டாயுதபாணியாக காட்சியளித்து அருள் பாலித்து கொண்டிருக்கிறார்.

இம் மூன்று திருக்கோவில்களும் சிறு மலைக்குன்றின் மீது ஒரே இடத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலானது சிவகாசியில் இருந்து விருதுநகர் செல்லும் மார்க்கத்தில் 3 கி.மீ. தூரத்தில் திருத்தங்கல் என்ற புண்ணிய பூமியில் அமைந்துள்ளது..

  • திருத்தங்கல் அருள்மிகு காளியம்மன் கோயில்
  • அருள்மிகு மாரியம்மமன் கோயில்
  • அருள்மிகு விநாயகர் கோயில்
  • திருத்தங்கல் இந்து நாடார் உறவின்முறை செயல்பாட்டில் உள்ளது.
  • திருத்தங்கல் இந்து நாடார் உறவின்முறை 1920 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  • திருத்தங்கல் நாடார் பங்களா கட்டிடம் 28-10-1929 அன்று துவக்கப்பட்டது.